நானும் சிப்ஸும்
(நான் சுட்டிப் பையனாக இருந்தப்ப எடுத்த ஃபோடோ)
கதை மொக்கையாய் இருந்தால் ஸாரீ . இது தான் என்னுடைய முதல் தமிழ் கதை. ஸாரீ கதை அல்ல உண்மையில் என் வாழ்வில் நடந்தவை .
அப்பா சிப்ஸ் பாக்கெட் , எடுத்துட்டு
வீட்டுக்குள்ள வந்தது தான்
தாமதம். வந்த அடுத்த நொடியே
நான் அந்த சிப்ஸ் பாக்கெட்
- ஐ எடுத்து விட்டேன். (Ussain Bolt தோற்று விடுவான்
போலும் !). வீட்டில் அப்பாவும் அம்மாவும் "கண்ணா ஜீவா, அண்ணனுக்கும்
தங்கைக்கும் கொடுத்து விட்டு , நீ
சாப்பிடு". ( நாம் குரங்கில் இருந்து
வந்தவர்கள் தானே , பிறகு எப்படி
கொடுத்து உண்ண த்தோணும்) . அப்பா
அம்மா விடம் நான் " இல்ல
அம்மா , அண்ணனுக்கும் தங்கைக்கும் பசிக்காது, அதனால் நானே full ah
சாப்பிட்டு விடுகிறேன். உடனே அம்மா " full ah சாப்பிட்டா வயிறு
வெடிச்சிடும் டா கண்ணா
".
உடனே எனக்குள் இருந்த genius " வயிறு என்ன தீபாவளி
பட்டாசா அம்மா ? வெடிக்கும் னு
சொல்றீங்களே " . இந்த
பேச்சு வார்த்தை உடன் சிப்ஸ் எனக்கு
கிடைத்து விடுமா என்ன? என்
அண்ணனுடனும் தங்கை உடனும் பெரிய
சண்டை போட்டேன். முடிவு என்ன? நம்ம
தமிழ் பட கத மாதிரி
தான் , நம்ம hero ஜீவா
தான் ஜெயிச்சாறு . ம்ம்ம்ம். ஒரு நிமிஷம் , சொல்ல
மறந்துட்டேனே , அந்த சிப்ஸ் சாதாரண
சிப்ஸ் இல்லை நேன்தரம் பழம்
சிப்ஸ். எனக்கு ரொம்ப பிடிக்கும்
, அதனால் தான் சண்டையே. சிப்ஸ்
தான் எனக்கு கெடச்சிடுத்தே
, அப்போறம் எதுக்கு அங்க இருக்கணும்
, (Let us fly in sky , என்று நினைத்துவிட்டு) வீட்டின்
மொட்டை மாடிக்கு சென்றேன் .
நான் சிப்ஸ் ஒவ்வொன்றாய்
தின்றேன் . நானும் சிப்ஸும். இது
போன்ற காதல் கதையைக்கூறுவதில் டைரெக்டர் மணிரத்னம் கூட தோற்று விடுவார்.(
சும்மா தமாஷ் பண்ணேன் . யாரும் கல்ல எடுத்து எறிய வேண்டாம்). நானும் சிப்ஸ் பாக்கெட்
full ஆ சாப்பிடலாம் னு நெனச்சு தான் சாப்பிட ஆரம்பிச்சேன் . பாதி சாப்பிட்ட உடனே வயிறு
நிரம்பி விட்டது. அப்பையாவ்வது என் அண்ணன் கிட்ட நான் கொடுத்திருக்கணும் . நமக்கு ரொம்ப
ego ஆச்சே , முயற்சி செய்து நானே சாப்பிட்டேன். விளைவு என்னவா இருக்கும்? நீங்களே யோசிங்களேன்
. வேற என்ன ? என்னோட வயிறு அண்டா size க்கு ஆயிடுச்சி . கொஞ்ச நேரத்துல எனக்கு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு . அம்மா
கிட்ட போய் "அம்மா வயிறு வலிக்குது மா ன்னு சொல்லி அழுதேன்". அதைக் கேட்ட
என் அண்ணன் கேலி செய்தான். அம்மா என்னை coffee
கடைக்கு அழைத்துச் சென்று எனக்கு சுக்கு
coffee வாங்கி கொடுத்தார்கள் . நானும் குடித்து
விட்டு வீடு திரும்பியதும் நன்றாக உறங்கி விட்டேன்.
காலைல எழுந்ததும் என் வயிற்றை " கும்பகர்னனைப் போல் இருக்குமோ என்ற பயத்துடன்
பார்த்தேன் ". நல்ல வேலை, நான் தனுஷ்
போல சிலிம் ஆகத் தான் இருந்தேன் . (சரி சரி , புரிகிறது . கொஞ்சம் ஓவர் ஆ தான் இருக்கும்.
இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டியது என் கடமை). எனக்கு வயிறு வலி சரியாகி விட்டது
.
குறிப்பு: என்னோட
வயித்து வலிய cafe day -ல இருக்குற எந்த
coffe-யும் குணப்படுத்தவில்லை . சாதாரண பெட்டிக் கடைச் சுக்கு காபீ தான் எனது
உடலை நலமாக்கியது )
இதில் இருந்து
நான் காற்று கொண்ட பாடம்: நாம் உண்ணும் உணவு நமக்கு பிடித்த உணவாய் இருந்தாலும், ஏன்
அமிர்த்மாய் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் நஞ்சாக தான் மாறும் . என்னோட
வாழ்க்கையில நடந்த இந்த மொக்கைக் கதையை கடைசி வரைப் படிச்ச நல்ல உள்ளங்களுக்கு நன்றி
. அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல் !
பின்குறிப்பு: ( ஓவர் ஆ சாப்பிட்டா உடம்புக்கு ஆகாது) பொங்கல் ரொம்ப சாப்பிடாதீங்க அளவா சாப்பிடுங்க :P :)