Tuesday, 14 January 2014

நானும் சிப்ஸும்

                            நானும் சிப்ஸும் 

                 

(நான் சுட்டிப் பையனாக இருந்தப்ப எடுத்த ஃபோடோ)

கதை மொக்கையாய் இருந்தால்  ஸாரீ . இது தான் என்னுடைய முதல் தமிழ் கதை. ஸாரீ கதை அல்ல உண்மையில் என் வாழ்வில் நடந்தவை .


      நம்ம வாழ்காயில நடக்குற எல்லாமே நமக்கு ஒரு பாடமா இருக்குமோ என்னவோ ? எல்லாமே இறைவனோட திருவிளையாடல் தான் . அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்திருப்பேன். அப்போ நடந்த ஒரு சின்ன விசயத்த , நான் உங்க கிட்ட இப்போ share  பண்ண போறேன். ஒரு நாள் அப்பா வெளியூர் போயிட்டு வீட்டுக்கு வந்தாரு. அட எல்லாரு வீட்டிலையும் வெளிய போனா ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரது , நம்ம தமிழ்நாடு கலாசாரம் ஆச்சே. அதுவும் எங்க அப்பா கலாசாரத்த ரொம்ப மதிக்கிற type  வேற. கேட்கவா வேணும். எங்க அப்பா வரும் போது சிப்ஸ் பாகெட் வாங்கிட்டு வந்தாரு . எனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லைன்னா பரவா இல்ல , அந்த சிப்ஸ் நானே சுட்டிறுப்பேன். ஆனால்  எங்க வீட்டில என் கூட பிறந்தது ரெண்டு பேரு. ஒரு அண்ணன். ஒரு தங்கை. அதனால நான் அவுங்களுக்கு குடுத்து தான் சாப்பிடணும்னு நீங்க நினைப்பீங்க. ஆனால் கதைல அங்க தான் சின்ன ட்விஸ்ட் வக்கிறாரு டைரெக்டரூ.
                 அப்பா சிப்ஸ் பாக்கெட் , எடுத்துட்டு வீட்டுக்குள்ள வந்தது  தான் தாமதம். வந்த அடுத்த நொடியே நான் அந்த சிப்ஸ் பாக்கெட் - எடுத்து விட்டேன். (Ussain Bolt தோற்று விடுவான் போலும் !). வீட்டில் அப்பாவும் அம்மாவும் "கண்ணா ஜீவா, அண்ணனுக்கும் தங்கைக்கும் கொடுத்து விட்டு  , நீ சாப்பிடு". ( நாம் குரங்கில் இருந்து வந்தவர்கள் தானே , பிறகு எப்படி கொடுத்து உண்ண த்தோணும்) . அப்பா அம்மா விடம் நான் " இல்ல அம்மா , அண்ணனுக்கும் தங்கைக்கும் பசிக்காது, அதனால் நானே full ah  சாப்பிட்டு விடுகிறேன். உடனே அம்மா " full ah சாப்பிட்டா வயிறு வெடிச்சிடும் டா  கண்ணா ".
                  உடனே எனக்குள் இருந்த genius " வயிறு என்ன தீபாவளி பட்டாசா அம்மா ? வெடிக்கும் னு சொல்றீங்களே " .  இந்த பேச்சு வார்த்தை உடன் சிப்ஸ் எனக்கு கிடைத்து விடுமா என்ன? என் அண்ணனுடனும் தங்கை உடனும் பெரிய சண்டை போட்டேன். முடிவு என்ன? நம்ம தமிழ் பட கத மாதிரி தான் , நம்ம hero  ஜீவா தான் ஜெயிச்சாறு . ம்ம்ம்ம். ஒரு நிமிஷம் , சொல்ல மறந்துட்டேனே , அந்த சிப்ஸ் சாதாரண சிப்ஸ் இல்லை நேன்தரம் பழம் சிப்ஸ். எனக்கு ரொம்ப பிடிக்கும் , அதனால் தான் சண்டையே. சிப்ஸ் தான் எனக்கு கெடச்சிடுத்தே  , அப்போறம் எதுக்கு அங்க இருக்கணும் , (Let us fly in sky ,  என்று நினைத்துவிட்டு) வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றேன் .
                                     நான் சிப்ஸ் ஒவ்வொன்றாய் தின்றேன் . நானும் சிப்ஸும். இது போன்ற காதல் கதையைக்கூறுவதில் டைரெக்டர் மணிரத்னம் கூட தோற்று விடுவார்.( சும்மா தமாஷ் பண்ணேன் . யாரும் கல்ல எடுத்து எறிய வேண்டாம்). நானும் சிப்ஸ் பாக்கெட் full ஆ சாப்பிடலாம் னு நெனச்சு தான் சாப்பிட ஆரம்பிச்சேன் . பாதி சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பி விட்டது. அப்பையாவ்வது என் அண்ணன் கிட்ட நான் கொடுத்திருக்கணும் . நமக்கு ரொம்ப ego ஆச்சே , முயற்சி செய்து நானே சாப்பிட்டேன். விளைவு என்னவா இருக்கும்? நீங்களே யோசிங்களேன் . வேற என்ன ? என்னோட வயிறு அண்டா size  க்கு  ஆயிடுச்சி . கொஞ்ச நேரத்துல எனக்கு வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு . அம்மா கிட்ட போய் "அம்மா வயிறு வலிக்குது மா ன்னு சொல்லி அழுதேன்". அதைக் கேட்ட என் அண்ணன் கேலி செய்தான். அம்மா என்னை coffee  கடைக்கு அழைத்துச் சென்று  எனக்கு சுக்கு coffee  வாங்கி கொடுத்தார்கள் . நானும் குடித்து விட்டு வீடு திரும்பியதும்  நன்றாக உறங்கி விட்டேன். காலைல எழுந்ததும் என் வயிற்றை " கும்பகர்னனைப் போல் இருக்குமோ என்ற பயத்துடன் பார்த்தேன் ". நல்ல வேலை,  நான் தனுஷ் போல சிலிம் ஆகத் தான் இருந்தேன் . (சரி சரி , புரிகிறது . கொஞ்சம் ஓவர் ஆ தான் இருக்கும். இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டியது என் கடமை). எனக்கு வயிறு வலி சரியாகி விட்டது .
                குறிப்பு: என்னோட வயித்து வலிய  cafe day -ல இருக்குற எந்த coffe-யும் குணப்படுத்தவில்லை . சாதாரண பெட்டிக் கடைச் சுக்கு காபீ  தான்  எனது உடலை நலமாக்கியது )
                இதில் இருந்து நான் காற்று கொண்ட பாடம்: நாம் உண்ணும் உணவு நமக்கு பிடித்த உணவாய் இருந்தாலும், ஏன் அமிர்த்மாய் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் நஞ்சாக தான் மாறும் . என்னோட வாழ்க்கையில நடந்த இந்த மொக்கைக் கதையை கடைசி வரைப் படிச்ச நல்ல உள்ளங்களுக்கு நன்றி . அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல் !  
                பின்குறிப்பு: ( ஓவர் ஆ சாப்பிட்டா உடம்புக்கு ஆகாது) பொங்கல் ரொம்ப சாப்பிடாதீங்க அளவா சாப்பிடுங்க :P :)


4 comments:

  1. Semma Story... Nentharam chips na solla va venum...Kerala vache...

    ReplyDelete
  2. Hey hey!!funny boy!!!anyhow your way of putting up the incident is awesome..Tamil story buk padikra feel :-D

    ReplyDelete