Friday, 10 February 2017

நான் மறுவார்த்தை பேசமாட்டேன் தாமரை madam!

ஒரு பெண் ஆண் மகனைப்புகழ்ந்தால் எவனுக்கு தான் பிடிக்காது? அதுவும் நம் உணர்வுகளை அப்படியே கவிதைத்தமிழில் செதுக்கினால்?? 
அது தான் தாமரை அவர்களின் speciality!



பாடலாசிரியர் தாமரையின் பாடல் வரிகளுக்கு , மின்னலே படத்தில் அவர் எழுதிய வசீகரா பாடலில் இருந்து நான் அவரது ரசிகன்.

திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே!!


என்ன ஒரு அழகிய வரிகள் அவை!
வசீகராவில் இருந்து , இப்பொழுது சமீபத்தில் அவர் எழுதிய ராசாலி பாடல் வரையில் என்ன ஒரு அற்புதமான பாடல்களை நமக்கு அளித்து வந்திருக்கிறார் தாமரை அவர்கள்!
அதிலும் இப்பொழுது அவர் எழுதிய மறுவார்த்தை பேசாதே!!
மறுவார்த்தைபேசாதே !!
ஆம் இவ்வளவு அருமையான பாடல் வரிகளைப் பரிசளித்தால் எப்படி மறுவார்த்தை பேச முடியும்! அதுவும் sid sriram குரலில் நம்மை ஈர்க்கும்போது ??



Sid Sriram's touch in the song :
பிடிவாதம் பிடி.
சினம் தீரும் அடி..
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழை காலம்

Thaamarai's Touch in the song:

விழி நீரும் வீணாக
இமை தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்ந்தேன்
கடலாக கண்ணானதே!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் மொழியின் இனிமை!



No comments:

Post a Comment