Thursday, 27 October 2016

Review - Book 4 of Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் - மணிமகுடம் (#4) [Ponniyin Selvan - Manimagudam]பொன்னியின் செல்வன் - மணிமகுடம் (#4) [Ponniyin Selvan - Manimagudam] by Kalki
My rating: 5 of 5 stars

பொன்னியின் செல்வன்- நான்காம் பாகம் :) மணிமகுடம் :)
முடி சூட்டப்பட்ட இளவரசன் கரிகாலனை மையமாகக் கொண்டே கதை நகர்கிறது.
ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் வந்தியத்தேவனிடம் முக்கியமான பொறுப்பினைக் குந்தவை ஒப்படைக்கிறாள். பல ஆபத்தில் சிக்கினாலும், அந்த வாணர்குலத்து வீரன், அதிலிருந்து தப்பிச்செல்வது அழகோ அழகு தான்.
இத்தகு வாலிபனிடம் மனதைப்பறிகொடுத்த மணிமேகலையை நாம் குறை சொல்லுவது நியாயமா? இல்லை இல்லை! பரிதாபம் தான் பட வேண்டும். ஏனென்றால் குந்தவையின் அழகில் அந்த வாலிபன் மயங்கியது மணிமேகலைக்குத் தெரிய வாய்ப்பில்லையே!!
ஆதித்த கரிகாலனின் நக்கல் பேச்சு என்ன அழகாக பகைவர்களின் நெஞ்சிலே பாய்ந்தது.
நந்தினியின் அழகிற்கு ஒரு பெண் இளவரசியே அடிமையாகிறாள் என்றாள், நந்தினியை நான் வருணிக்க தமிழில் வார்த்தை தான் உண்டோ?
முடிவாக நான் ஒன்று கூற விரும்புகிறேன்!!
ஊமை ராணிக்கு என்ன நேர்ந்தது?
சுந்தர சோழரின் மனக்கவலை நீங்கியதா ? இல்லை தொடருமா?
நந்தினியின் குணம், அதற்குக்காரணம் என்ன?
வீரன் ஆதித்த கரிகாலனா அல்லது மதுராந்தகனா?
இப்படி பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடையளித்தாலும்,
ஆதித்த கரிகாலன் நந்தினியிடம், "நீ யார் ? அதை மட்டும் சொல்லிவிடு , நந்தினி" எனக் கேட்கும் கேள்விக்கு விடை அளிக்காமல் வாசகனான எனக்கு , அதாவது இந்த நான்கு புத்தகங்களை முடித்த பிறகும் புரியாத புதிராக நந்தினி என்னை வாட்டி வதைக்கிறாள்!
பொன்னியின் செல்வராகிய அருள்மொழியைச் சிறிதளவும் வாசகர்களின் கண்களுக்கு , கல்கி அவர்கள் காட்டாமலே நான்காம் புத்தகத்தை எழுதி, அடுத்து என்ன தான் நடக்குமோ என்கிற ஆவலைத் தூண்டி , கடைசி புத்தகமாகிய ஐந்தாம் பாகத்தைச்சற்றும் தாமதமின்றி எடுக்கச் சொல்லுகிறார்.
இதோ எடுத்து விட்டேன் கல்கி அவர்களே!!

View all my reviews

No comments:

Post a Comment