![பொன்னியின் செல்வன் - தியாக சிகரம் (#5) [Ponniyin Selvan - Thiyaga Sigaram]](https://images.gr-assets.com/books/1349291914m/16064724.jpg)
My rating: 5 of 5 stars
பொன்னியின் செல்வன் -தியாக சிகரம்(ஐந்தாம் பாகம்)
பல அதிர்ச்சி அளிக்கும் திருப்பங்களை உள்ளடக்கிய
அருமையான புத்தகம் இந்த இறுதிப்பாகம்.
உண்மையாகவே அருள்மொழிவர் தியாக சிகரம் என்றால் அது மிகையாகாது.
வந்தியத்தேவனுடன் நான் மேற்கொண்ட பயணம் எத்தகு இன்பப் பயணம்!!
குந்தவையும் , வல்லவரையனும் மெய் சிலிர்க்கும் வண்ணம் பேசும் காதல் வசனங்கள் அடடே!!
பூங்குலலியை ரசித்த நம்மை மணிமேகலையையும் ரசிக்கும் வண்ணம் எழுதியிருக்கிறார்.
பெரிய பலுவேட்டரையரின் மாசற்ற அவதாரம் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த மாசு நந்தினி தானே!
நந்தினி இந்தப்புத்தகத்தில் இனி இடம்பெறமாட்டாள் என்று கல்கி கூறியதும் கண்ணீர் என் கண்களிடம் அனுமதி பெறாமல் கசிந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
புத்தகம் முடிந்தது தான் ஒரு பக்கம் வருத்தமாக இருக்கிறது!
அனைவரும் படித்து ,பேரின்பம் பெறத்தகுக் காவியம் கல்கி அவர்களால் படைக்கப்பெற்ற பொன்னியின் செல்வன்.
View all my reviews
No comments:
Post a Comment