Thursday 27 October 2016

Finished reading the epic series பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
2400 பக்கங்கள் நான் படித்ததாகத் தோன்றவில்லை 1000 ஆண்டுகள் முன் சென்று வந்தியத்தேவனோடு  Time Traveling செய்த ஒரு feeling-u!
 சாமர்த்தியம் நிறைந்த குறும்புக்காரனும் என்னுடன் புத்தகம் முற்றும் வரையில் கைக்கோர்த்து நடந்து, பயணத்தை உற்சாகப்படுத்தியவனுமான வந்தியத்தேவன் !
வீரத்திருமகன் ஆதித்த கரிகாலன்! மக்கள் நாயகனும் ,வயதில் சிறியவனும் குணத்தில்
உயரமானவனுமானஅருள்மொழிவர்மரும்! போட்டு வாங்கும் , சொல்லிலும் செயலிலும் கெட்டிக்காரனுமான ஆழ்வார்க்கடியான்!
விசித்திரமான தெய்வம் ஊமைராணி! முதலானோரைக் கண்டு மகிழ்ந்தேன்!!
வெட்கம் உரு கொண்ட அழகிய வானதி!
அழகும் அறிவும் நிறைந்த குந்தவை!! படகோட்டியும் எதற்கும் அஞ்சாதவளுமான பூங்குழலி! இனியதோர் யாழிசைக்கும் மணிமேமகலை! இவர்களிடம் மயங்கினேன் !ஆனால் தப்பிப்பிழைத்தேன்.வார்த்தைகளால் வருணிக்க முடியாத, தான் நினைத்தை எப்படியும் சாதிக்கும் நந்தினி என் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டாள்! பைத்தியம் கொள்ளச் செய்தாள்! அவளுக்காகக் கண்ணீரும் வடித்தேன்! அவள் ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் என்பதையும் மறந்து!!
 தஞ்சை, இலங்கை, மாமல்லபுரம்; பழையாறை ,கடம்பூர் முதலான இடங்களில் பல நாட்கள் காலம் செலுத்தியதை ஒத்த ,ஓர் அழகிய அனுபவம்.  இது பொய்யல்ல மெய்தான் என நம் மனம் உறுதி பெறும் அளவிற்கு  தமிழ் மொழியில் கற்பனைப் பொங்க சுவையூட்டுகிறார் அமரர் கல்கி அவர்கள்.
இதை வெறும் புத்தகமாக என்னால் கருத முடியவில்லை. நான் மேலே எழுதிய வார்த்தைகள் பலருக்கு மிகையாகத் தோன்றலாம் ஆனால் புத்தகம் படித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும் ஓர்  அற்புதமான உணர்வு அது!!
பொன்னியின் செல்வன்!!

No comments:

Post a Comment